17 சுவிஸ் நிறுவனங்களை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ரஷ்ய ஹக்கர்கள் 4 பேர் தாய்லாந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சைபர் குற்றவாளிகள் சுவிஸ் நிறுவனங்கள் மற்றும் உலகெங்கும் சுமார் ஆயிரம் பேரிடம் இருந்து 16 மில்லியன் டொலர்களை திருடியுள்ளனர்.
புகெட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களிடம் 40 இலத்திரனியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்களை நாடு கடத்துமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.