Baden-Württemberg இல் உள்ள Offenburg இல், திரையரங்கின் முன்பாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து பொலிசார் குற்றவாளியைத் தேடி ட்ரோனின் உதவியுடன் பாரிய தேடுதலில் ஈடுபட்டனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்ட போதும் அவரது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பாகவோ, குற்றவாளி அல்லது குற்றத்திற்கான காரணம் தொடர்பாகவே பொலிசார் தகவல் எதையும் வெளியிடவில்லை.
மூலம்- 20min.