Fällanden இல் எரிபொருள் நிலையத்தில் கொள்ளையடித்தவர் மறுநாள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை, எரிபொருள் நிலையத்திற்குச் சென்று கத்தியைக் காண்பித்து அங்கிருந்த இரு ஊழியர்களை அச்சுறுத்திய நபர், நூற்றுக்கணக்கான பிராங்குகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்ட சூரிச் பொலிசார், மறுநாள் பிற்பகல் Fällanden இல் உள்ள வீட்டில் வைத்து குற்றவாளியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய சுவிஸ் நாட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – 20min.