-0.2 C
New York
Tuesday, December 30, 2025

சுங்க சோதனையில் இரசாயனக் கசிவு- பெரும் விபத்து தவிர்ப்பு.

Thayngen சுங்க பணியகத்தில் சோதனைக்காக காத்திருந்த ட்ரக் ஒன்றில் இருந்த இரசாயன பரல்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.

உயர் தீ அபாயப் பொருளான இரசாயனங்களை ஏற்றிய ட்ரக் சுங்க சோதனைக்காக காத்திருந்த போதே நேற்றுக்காலை 11.30 மணியளவில் இந்தக் கசிவு அவதானிக்கப்பட்டது.

உடனடியாக Thayngen and Schaffhausen தீயணைப்பு துறையினரும் Schaffhause பொலிசாரும் இரசாயனக் கசிவு ஏற்பட்ட இரண்டு பரல்களை அடையாளம் கண்டு திரவக் கசிவை நிறுத்தினர்.

அத்துடன் தீ விபத்து ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

உரிய நேரத்தில் கசிவு கண்டறியப்பட்டதால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

மூலம்- polizeinews.ch

Related Articles

Latest Articles