Aargau கன்டோனில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில், ஒரு பெண் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆண் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
வீதி சற்று பனியால் மூடப்பட்டு வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.
மூலம்- bluewin