19.8 C
New York
Thursday, September 11, 2025

ஏழு தொன் தங்கத்தை சுவிசுக்கு கடத்திய இத்தாலியர்.

ஏழு தொன் தங்கத்தை சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்ததாக 65 வயதான இத்தாலியர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இவரது நீண்டகால தங்கக் கடத்தல் நடவடிக்கையை ஜெர்மன், இத்தாலி மற்றும் லிச்சென்ஸ்டீன் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சுவிஸ் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

65 வயதான இத்தாலியரே கடத்தல் கும்பலின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் மீது வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2016 முதல் 2021 வரை, வாகனங்களில் சிறப்பாக உருவாக்கப்பட்ட மறைவிடங்கள்  மற்றும் கூரியர்கள் மூலம் தங்கம் 7 தொன் தங்கம் சுவிட்சர்லாந்திற்கு கடத்தப்பட்டுள்ளது.

தட்டுகள், பார்கள், நகைகள் மற்றும் நாணயங்கள் வடிவில் இந்த தங்கம்  சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் சுமார் 25 மில்லியன் பிராங் எரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles