பல நாட்களாக Bässlergut சிறையில் உண்ணாவிரதம் இருந்த 5 கைதிகள் தமது போராட்டத்தை வியாழக்கிழமை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
சிறைச்சாலையின் நிலைமை, உணவின் தரம், அதிகாரிகள் தம்மை நடத்தும் விதம் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாடுகடத்தல் சிறையில் இருக்கும் மூவர் கடந்த 2ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மேலும் இருவர் 8ஆம் திகதி இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இந்த சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுவது வழமையாகும்.
கடந்த ஆண்டு 28 உண்ணாவிரத சம்பவங்கள் இங்கு பதிவாகியுள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான அல்ஜீரியர் தாம் நாடு திரும்ப விரும்பவில்லை என்றும் இங்கேயே இறக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் வியாழக்கிழமை இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
மூலம்- 20min.