4.4 C
New York
Monday, December 29, 2025

வயலுக்குள் பாய்ந்த கார்- யாழ். எம்.பி இளங்குமரன் படுகாயம்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விபத்தில்  படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் நேற்று மாலை, வேகக்கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இளங்குமரன் தலையில் காயம் அடைந்துள்ளார். மேலும் இருவர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு பார்வையிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles