Davos இல் உள்ளக நீச்சல் தடாகத்தில் நண்பனுடன் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மூச்சுப் பேச்சின்றியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
12 வயதுச் சிறுவன் நீருக்கடியில் அசைவின்றிக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சிறுவனின் நிலை ஆபத்தானதாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்- bluewin