16.5 C
New York
Tuesday, September 29, 2026

நீச்சல் தடாகத்தில் அசைவின்றி கிடந்த சிறுவன்- ஆபத்தான நிலையில்.

Davos இல் உள்ளக நீச்சல் தடாகத்தில் நண்பனுடன் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மூச்சுப் பேச்சின்றியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

12 வயதுச் சிறுவன் நீருக்கடியில் அசைவின்றிக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிறுவனின் நிலை ஆபத்தானதாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles