2024ஆம் ஆண்டு புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் முந்திய ஆண்டை விட 2,483 குறைவாக கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 2024ஆம் ஆண்டு 27,740 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள், கிடைத்திருந்தன.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை 8.2 வீதம் குறைந்துள்ளது.
இதில் 7,260 விண்ணப்பங்கள் பிறப்புகள், மற்றும் ஏற்கனவே குடியிருப்பு அனுமதி உள்ளவர்களிடமிருந்து வந்த விண்ணப்பங்கள் என்று இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் நாட்டவர்களிடம் இருந்து, 8,627 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
அதையடுத்து துருக்கி 4,107 விண்ணப்பங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான், துருக்கி, சிரியாவில் இருந்து கிடைக்கும் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.
கடந்த ஆண்டில், 10,390 பேருக்கு, புகலிடம் அளிக்கப்பட்டது. இது 34.2 வீதம் ஆகும்.
2023ஆம் ஆண்டு 25.7 வீதமானவர்களுக்கு புகலிட அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் 6,459 பேருக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 12.5 வீதத்தினால் குறைந்துள்ளது.
மூலம்- 20min