Wetzikon இற்கும் Uster இற்கும் இடையே இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.
இன்று காலை 7.30 மணியளவில் 18 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற கார், மறுபக்கத்தில் பாய்ந்து எதிரே வந்து கொண்டிருந்த டாங்கர் லொறியுடன் மோதியது.
இதையடுத்து மேலும் சில வாகனங்கள் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் இரண்டு பக்கங்களிலும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மூலம்- bluewin