சூரிச்சில் வசித்து வரும், ஒரு பணக்கார தம்பதியினர் வரிகளைச் சேமிக்க Zug இல் ஒரு வில்லாவை வாங்கிய நிலையில் வரிப் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
சூரிச் மாகாணத்தில் வசிக்கும் , ஓய்வு பெறும் வயதை எட்டிய தம்பதியினர் 2017 ஆம் ஆண்டில், Zug மாகாணத்தில் ஆறு மில்லியன் பிராங்குகளுக்கு ஒரு வில்லாவை வாங்கினர்.
ஆனால் அவர்கள் உண்மையில் அங்கு வசிக்கச் செல்லவே இல்லை.
சூரிச்சின் Säuliamtஇல் மூன்று மில்லியன் பிராங்குகள் மதிப்புள்ள ஒற்றை குடும்ப வீட்டை இவர்கள் வைத்திருந்தனர்.
அதுதான் வரி அதிகாரிகளை சந்தேகிக்க வைத்தது.
தம்பதியினரின் வரி மோசடியைக் கண்டுபிடிக்க புலனாய்வாளர்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தினர்.
ஷொப்பிங் பழக்கம் மற்றும் நீர் பயன்பாடு மூலம் சூரிச் வரி புலனாய்வாளர்கள் இந்த மோசடியைக் கண்டுபிடித்தனர்.
தம்பதியினர் பெரும்பாலும் ஷொப்பிங் செய்யும் இடத்தை அவர்கள் சோதித்தனர்.
சூரிச் மாகாணத்தில் உள்ள அவர்களின் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லாத Coop மற்றும் Denner கிளைகளில் அதிக கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதே நேரத்தில் அவர்கள் Zug இல் எந்த ஷொப்பிங்கையும் செய்யவில்லை.
சூரிச் வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சார நுகர்வு குறையவில்லை.
சூரிச்சில் உள்ள தரைவழி தொலைபேசி இணைப்பும் பயன்பாட்டில் இருந்தது.
ஆனால் Zugஇல் புதியது எதுவும் நிறுவப்படவில்லை.
இதையடுத்து, சூரிச் வரி அதிகாரிகளுக்கு ஆதரவாக பெடரல் நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூலம்- 20min.

