-0.2 C
New York
Tuesday, December 30, 2025

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 5 பேர் கைது.

பாஸல்-ஸ்டாட் கன்டோனல் காவல்துறை போதைப்பொருள் கடத்தல் கூட்டு நடவடிக்கையின் போது Kleinbasel இல் ஐந்து பேரை கைது செய்துள்ளது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்களில்  மூவரை காவலில் வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்கப்படவுள்ளது.

போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை இப்போது விசாரணை நடத்தி வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் நைஜீரிய குடியுரிமை பெற்ற  29 முதல் 42 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள்,  26 வயது பெண் மற்றும் 45 வயதுடைய ஸ்பானிஷ் பெண் ஆகியோரிடம் இருந்து பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருட்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து நடைபெறும் நடவடிக்கைகள் மற்றும் காவல்துறை தந்திரோபாய காரணங்களுக்காக, மேலும் எந்த தகவலையும் வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

மூலம் – polizeinews.ch

Related Articles

Latest Articles