-0.2 C
New York
Tuesday, December 30, 2025

வியாழன் தொடங்கும் லூசெர்ன்  திருவிழா – பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை.

லூசெர்ன்  திருவிழாவிற்கான (lucerne carnival) எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது. மார்ச் 4ஆம் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாவிற்கு புதிய பாதுகாப்பு திட்டத்தை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.

சதுக்கத்தின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் Mühlenplatz, Kramgasse, Reussbrücke, Krongasse, Metzgerrainle, unter der Egg, Rathausquai மற்றும் Rathaussteg ஆகிய இடங்களில் உள்ள தரிப்பிடங்களில் கார்னிவல் மிதவைகளை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான இடங்களில் மக்கள் வருகை கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கூட்டம் அளவிடப்படும்.

கூடுதலாக, மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பொது போக்குவரத்தைப் பயன்படுத்த லூசெர்ன் காவல்துறை கடுமையாக அறிவுறுத்துகிறது.

கூடுதல் ரயில்கள்,  பேருந்துகள் மற்றும் கப்பல்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும்  லூசெர்ன் காவல்துறை அறிவித்துள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles