4.1 C
New York
Monday, December 29, 2025

நிதி வெட்டுக்கு எதிராக திரண்ட மக்கள்.

Science Magazine ஒழிப்பு மற்றும் ரேடியோ SRF 2 Kultur இல் கலாச்சார இதழியல் வெட்டுக்களுக்கு எதிராக, நேற்று பாசலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பலநூறு பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், SRF நிர்வாகத்திடம் 27,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்களைக் கொண்ட ஒரு மனுவை ஒப்படைத்தனர்.

நேயர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலாச்சார நிபுணர்களின் போராட்ட அழைப்பை ஏற்று  நூற்றுக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

SRF 2 Kultur ஒளிபரப்புகள் தயாரிக்கப்படும் SRF ஸ்டுடியோ பாசலுக்கு முன்னால் உள்ள மெரெட் ஓப்பன்ஹெய்ம்-பிளாட்ஸில்  நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்தனர்.

கேட்போர் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டி, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் பிராங்குகளைச் சேமிக்க விரும்புவதாக Schweizer Radio und Fernsehen அறிவித்திருந்தது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles