உக்ரைனுக்கு ஆதரவாக பெர்னில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர்.
அவர்கள் ஒரு நியாயமான அமைதிக்காகவும், சுவிட்சர்லாந்து அதன் உறுதிப்பாட்டை அதிகரிக்கவும் அழைப்பு விடுத்தனர்.
உக்ரைனுக்கு பொருளாதார ஆதரவையும், ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை தொடர்ந்து மற்றும் கடுமையாக செயல்படுத்துவதையும் அவர்கள் வலியுறுத்தினர்.
சுவிட்சர்லாந்திற்கு பொறுப்பு உள்ளது என்றும், மேலும் அது இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்றும் கூறிய அவர்கள், பயன்படுத்தப்படாத சுவிஸ் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பு, ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை அமுல்படுத்து! மற்றும் இப்போது உக்ரைனை ஆதரிக்கவும்! போன்ற பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
சுவிட்சர்லாந்திற்கான உக்ரைன் தூதுவர் இரினா வெனெடிக்டோவா மற்றும் மரியுபோலின் முன்னாள் மேயர் வாடிம் போய்சென்கோ ஆகியோர் இந்தப் பேரணியில் உரையாற்றினர்.
கூட்டத்திற்கு முன்னதாக முன்ஸ்டர்பிளாட்ஸிலிருந்து நகர மையம் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. பெர்ன் நகர சபை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
மூலம்- bluewin