Lupfig இல் நேற்று இரவு 8 மணியளவில், Aargau பொலிஸ் அவசர அழைப்பு மையத்திற்கு லம்போகினி கார் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
தீயணைப்புப் படையினரும், கன்டோனல் பொலிசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
லம்போகினி கார் வீதியில் எரிந்து கொண்டிருந்த நிலையில்,19 வயது ஓட்டுநர் சரியான நேரத்தில் வாகனத்திலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.
தீ அணைக்கப்படும் போது Hausen மற்றும் Lupfigஇடையிலான பாதை மூடப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
லம்போகினி முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
மூலம்- 20min