மோர்கஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 79 வயது சுவிஸ் முதியவர் ஒருவர் நேற்று சைக்கிளுடன் பள்ளத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
மீட்புப் படையினர் விரைவாக அவரை மீட்ட போதும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
விபத்து நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.
விபத்து இடம்பெற்ற சூழ்நிலைகளை தெளிவுபடுத்த, Vaud கன்டோனல் பொலிசார் சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கோருகின்றனர்.
மூலம்- 20min