நேற்றுக்காலை கடுமையான ஆஸ்துமா நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அதிக செறிவூட்டப்பட்ட ஒக்ஸிஜன் அவருக்கு வழங்கப்படுவதுடன், இரத்தமாற்ற சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
போப், நிமோனியா மற்றும் சிக்கலான சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது என்றும், போப் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீளவில்லை என்றும், நேற்றுமாலை வத்திக்கான் தெரிவித்துள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இருக்கும் போப்பிற்காக உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன.
மூலம்- 20min.