Rapperswil-Jona வில் உள்ள மீன் சந்தை சதுக்கத்தில் நேற்று அதிகாலை ஒரு கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
22 வயது இளைஞனை அடையாளம் தெரியாத ஒருவர் பலமுறை உதைத்து தலையில் தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
22 வயது இளைஞன் நள்ளிரவு 12:30 மணிக்கு சற்று முன்னர், குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குடிபோதையில் இருந்த அந்த நபர், இளைஞனை பலமுறை தாக்கி தலையில் உதைத்துள்ளார்.
அங்கிருந்த காவலர்களால் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த நபர் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளார்.
மூலம்- 20min.