18.8 C
New York
Tuesday, September 9, 2025

ஹொட்டேலில் தங்கியிருந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம்.

Konstanz இல் உள்ள ஹொட்டேலில் தங்கியிருந்த ஒருவர் நேற்றுக் காலை, பல்கனியில் இருந்து திடீரென வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

35 வயதுடைய அந்த நபர் சத்தமாக கத்திக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், ஹொட்டேலில் குழப்பம் ஏற்பட்டது.

உடனடியாக பொலிசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். சிறப்பு கொமாண்டோக்களும் வரவழைக்கப்பட்டனர்.

எனினும், அந்த நபர் தானாக முன்வந்து அறையிலிருந்து வெளியே வந்து சரணடைந்தார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles