18.3 C
New York
Monday, September 8, 2025

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரத்தப் பரிசோதனை முடிவுகள், சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் தற்போது அவைக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சுய நினைவுடன் இருக்கின்றார் என்றும், உடல்நிலை மோசமாக இருந்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் திருப்பீடச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் திருத்தந்தையின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் திருப்பீடச்செய்தித் தொடர்பகமானது, பிப்ரவரி 24, வெளியிட்ட செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுய நினைவுடன் இருப்பதாகவும், ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்துள்ளது.

இரத்தப் பரிசோதனை முடிவுகள் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், தற்போது அவைக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்றும்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பராமரிப்பவர்களுடன் இணைந்து மருத்துவமனையில் தங்கி இருக்கும் அறையில் ஞாயிறு திருப்பலியில் பங்கெடுத்துக் கொண்டார் என்றும் எடுத்துரைக்கின்றன.

உரோம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மறைமாவட்டங்களிலும் திருத்தந்தையின் உடல்நலத்திற்காக பல்வேறு செபவழிபாட்டினை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles