Schwyz இல் பராகிளைடர் மின்கம்பிகளில் சிக்கி தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
- Advertisement -

29 வயதுடைய பயிற்சி விமானி ஒருவரும், 31 வயதுடைய விமானியும் அந்த பராகிளைடரில் பயணம் செய்தனர்.
அது எதிர்பாராத வகையில் மின்சாரக் கம்பி இணைப்புகளில் சிக்கி தீப்பற்றி எரியத் தொடங்கியது.
உடனடியாக அதில் இருந்த இரண்டு பேரும் பாதிப்புகள் ஏதும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.


