22.8 C
New York
Tuesday, September 9, 2025

அதிகாலையில் ஹொட்டேலில் தீவிபத்து.

Valais  நகரசபைக்கு உட்பட்ட Leukerbad பகுதியில் அமைந்துள்ள ஹொட்டேலில் இன்று  அதிகாலை  3 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து ஹொட்டேலில் தங்கியிருந்த 17 பேர் கட்டடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அவர்களில் 9 பேர் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் காலில் எரிகாயம் அடைந்தார்.

அதிகாலை 5.10 மணியளவில் தீ முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles