-5.5 C
New York
Friday, January 2, 2026

ஹங் கிளைடர் விமானி பலி.

Valais கன்டோனில் உள்ள Levron இல்  ஹங் கிளைடர் விபத்தில் அதன் விமானி உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்னும் கண்டறியப்படாத காரணங்களால், ஹங் கிளைடர் கட்டுப்பாட்டை இழந்து Vollèges அருகே ஆழத்தில் விழுந்தது.

அவசர சேவைகள் வரும் வரை அருகில் இருந்த இரண்டு பேர், உடனடியாக விமானியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஆனாலும், 52 வயதான சுவிஸ் விமானி, விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து பெடரல் வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கன்டோனல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles