-2.9 C
New York
Thursday, January 1, 2026

கணவனை எரித்துக் கொல்ல முயன்ற மனைவி.

Uster இல் உறங்கிக் கொண்டிருந்த கணவனை தீயிட்டு எரித்துக் கொலை செய்ய முயற்சித்தார் என மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தச் சம்பவம்  இடம்பெற்றது.

இரவு 9.30 மணியளவில் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை 50 வயதுடைய மனைவி எரித்துக் கொல்ல முயன்றார்.

உடனடியாக மகள் விரைந்து சென்று தந்தையைக் காப்பாற்றியதால், பலத்த எரிகாயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் கணவனை எரித்து கொலை செய்ய முயற்சித்தார் என மனைவிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை  நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

மூலம்- 20min.

Related Articles

Latest Articles