Lucerne கார்னிவல் நாளை ஆரம்பமாகின்ற நிலையில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு முன்னேற்பாடாக, 70 பெரிய பைகளில் மணல் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
கமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காயங்கள் ஏற்படுவது மற்றும் குப்பைகளைக் குறைக்க, கண்ணாடிப் போத்தல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்னிவலின் போது அதிக இரைச்சல் இருக்கும் என்பதால், காது பாதுகாப்பு கருவியை அணியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்-20min.