Solothurn கன்டோனில் உள்ள Däniken இல், கார் பழுதுபார்க்கும் இடம் ஒன்று தீக்கிரையான சம்பவத்தின் பின்னால், நாசவேலை இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீவிபத்தை அடுத்து தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று அதனைக் கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் யாரேனும் இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மூலம்-20min.