சுவிட்சர்லாந்தில் உள்வீட்டு கொலைகளில் துப்பாக்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதில் ஈடுபடும் குற்றவாளிகளில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்ட சுவிஸ் நாட்டவர்கள் என, பெடரல் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட இந்த குற்றங்கள் குறித்த ஆய்வில் இது காட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட சுவிஸ் பெண்கள் வீட்டில் துப்பாக்கிகளால் கொல்லப்படும் அபாயத்தில் உள்ளனர்.
2015 மற்றும் 2022 க்கும் இடையில் உள்வீட்டு வன்முறையில் துப்பாக்கியால் கொலை செய்யப்பட்ட வழக்கில், 41 குற்றவாளிகளில் ஒருவர் பெண் என்று ஆய்வு காட்டுகிறது.
பெரும்பாலான வழக்குகளில் பெண்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக சுவிட்சர்லாந்தில் கொலைகளில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது ஒட்டுமொத்தமாகக் குறைந்துள்ளதாகவும் ஆய்வு காட்டுகிறது.
இருப்பினும், உள்வீட்டு வன்முறையில்இந்தச் சரிவு மிகவும் குறைவாகவே உள்ளது.
மூலம்- bluewin