Küsnacht இல் உள்ள 230 ஆண்டுகள் பழைமையான Zum Trauben restaurant நிரந்தரமாக மூடப்படுகிறது.
1797 ஆம் ஆண்டு முதல் உணவகமாக இருந்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம், எதிர்காலத்தில் ஒரு வீடாகப் பயன்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய உணவகக் குழு நான்கு மாதங்களுக்கு முன்னரே Zum Trauben da Nikos என்ற பெயரில் உணவகத்தைத் திறந்தது.
அதற்கு முன்பு, ஆறு ஆண்டுகளாக உணவகம் Finifini யாக நடத்தப்பட்டது.
குத்தகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் உள்கட்டமைப்பின் நிலைதான் விரைவாக மூடப்படுவதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
மூலம்- bluewin