Eglisau வில் 6,000 கஞ்சா செடிகளைக் கொண்ட ஒரு உட்புற தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை சூரிச் பொலிசார் கைது செய்தனர்.
பயிரிடப்பட்ட செடிகளை விட மேலதிகமாக 100 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் 26 வயதான வடக்கு மாசிடோனியன் நாட்டவர், 31 வயதான செக் நாட்டவர் ஆகியோரும், 26 முதல் 48 வயதுக்குட்பட்ட சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்களும் அடங்கியுள்ளனர்.
மூலம் – 20min.