கடந்த ஆண்டு மே மாதம் Uitikon சீர்திருத்தப் பள்ளியிலிருந்து நான்கு சிறுவர்கள் தப்பிச் சென்றனர்.
அவர்கள் பராமரிப்பாளர்களை ஒரு அறையில் பூட்டிவிட்டு உடைந்த சமையலறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்றனர்.
தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவருக்கு இப்போது 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது 20 வயதான அந்த சிரிய இளைஞன், நாட்டை விட்டு வெளியேற்றப்படவும், ஐந்து ஆண்டுகளுக்கு அவர் சுவிசுக்குள் பிரவேசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Dietikon மாவட்ட நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மூலம் – 20min.