சுவிட்சர்லாந்தில் வாட்ஸ்அப் சமூக ஊடகம் நேற்று செயலிழந்ததால் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நேற்று மாலை 4 மணியளவில் வாட்ஸ்அப் தகவல் அனுப்பும் சேவையை பயன்படுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான பயனர்கள் தவித்தனர்.
சுமார் 4900 பேர் இதுகுறித்து முறையிட்டுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்ப பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக Meta நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேவேளை, Meta நிர்வாகத்தில் உள்ள பேஸ்புக்கின் மெசஞ்சர் சேவையிலும் நேற்று தடங்கல்கள் ஏற்பட்டன.
மூலம்- bluewin