சூரிச்சில், Höngg district மாவட்டத்தில் உள்ள Gsteigstrasse இல் தபால் நிலையத்தில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
நேற்றுக்காலை 11 மணியளவில் முக மூடி அணிந்த ஒருவர், தபால் நிலைய பணியாளரை அச்சுறுத்தி அங்கிருந்த நூற்றுக்கணக்கான பிராங் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
- Advertisement -

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தப்பிச் சென்ற கொள்ளையரை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மூலம்- bluewin


