Rämismühle இல் நேற்று இடம்பெற்ற மோசமான விபத்து ஒன்றில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று, பிற்பகல் 4:15 மணியளவில் , Turbenthal ஐ நோக்கி வாகனம் ஓட்டிச் சென்ற 29 வயது பெண் ஓட்டுநர், தெளிவாகத் தெரியாத காரணங்களுக்காக, எதிர்ப் பாதையில் காரை ஓட்டிச் சென்றார்.
இதன்போது, 54 வயது பெண் ஓட்டி வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
29 வயதுடையவரின் வாகனத்தில் ஐந்து வயது குழந்தையும் ஒரு மாதக் குழந்தையும் இருந்தனர்.
54 வயது ஓட்டுநர் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்தார். விபத்தில் நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து சூரிச் கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் வீதி மூடப்பட்டு, மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
இரவு 8 மணியளவில் வீதி மீண்டும் திறக்கப்பட்டது.
மூலம்- 20min.