ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பாராகிளைடர் விமானி, டிசினோவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்தார்.
பத்து மீட்டர் உயரத்தில் இருந்து அவர் விழுந்து விபத்திற்குள்ளானார்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டிசினோ கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர், பைடோவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
Basel-Landschaft கன்டோனைச் சேர்ந்த 57 வயது பராகிளைடர் விமானிக்கு தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், சுமார் பத்து மீட்டர் உயரத்தில் இருந்து ஒரு புல்வெளியில் விழுந்தார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- bluewin