17.5 C
New York
Wednesday, September 10, 2025

ஜெர்மனியில் காரால் மோதி தாக்குதல்- 2 பேர் பலி.

ஜெர்மனியின் Mannheim நகர கடைத்தெருவில் மக்கள் கூட்டத்தின் மீது காரினைவேகமாக செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் 25 பேர் வரை காயம் அடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

40 வயதுடைய ஜெர்மனியர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

அவர் உடனடியாக கைது செய்யப்பட்ட போது,துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மன நலப் பிரச்சினையால் அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது தீவிரவாத அல்லது மதவாத தாக்குதல் அல்ல என்று ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles