ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வரும் Lucerne திருவிழா சாம்பல் புதன் இரவுடன் நிறைவுக்கு வருகிறது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்த நிகழ்வை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
இறுதிநாளான இன்று 80இற்கு மேற்பட்ட கலாசார குழுக்களின் அணிவகுப்புகள் இடம்பெறும்.
கடந்த திங்கட்கிழமை நடந்த களியாட்ட அணிவகுப்பை சுமார் 1 இலட்சம் பேர் பார்வையிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று இரவுடன் நிறைவுபெறும் இந்த களியாட்ட நிகழ்வில் அதிக எண்ணிக்கையானவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு Lucerne திருவிழா சற்று முன்னதாக- பெப்ரவரி 12ஆம் திகதி ஆரம்பமாகும்.
மூலம்- bluewin