Lucerne களியாட்டத் திருவிழாவில் மர்மநபர்கள் பட்டாசுகளை வீசியதில், 4 பொலிசார் காயம் அடைந்தனர்.
நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாவில், மக்கள் கூட்டத்தின் நடுவே சில மர்ம நபர்கள் பட்டாசுகளை கொளுத்தி வீசினர்.
ரோந்து சென்று கொண்டிருந்த 4 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர்.
பட்டாசுகளை வீசியவர்கள் தப்பிச் சென்ற நிலையில் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.