20.1 C
New York
Wednesday, September 10, 2025

கார் மோதி பெண் பாதசாரி பலி.

பெர்னில் உள்ள Boll இல், கார் மோதி பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதசாரிகள் கடவையில், நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஒரு அம்புலன்ஸ் அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

அங்கு அவர் உயிரிழந்தார் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணங்கள் புதன்கிழமை மாலை வரை தெளிவாகத் தெரியவில்லை என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இறந்தவரின் அடையாளம் குறித்து உறுதியான அறிகுறிகள் இருந்தன, ஆனால் முறையான அடையாளம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles