Zermatt இல் உள்ள Furi என்ற குக்கிராமத்தில் 75 வயது சுவிஸ் நபர் ஒருவர் காணாமல் போனதாக திங்கட்கிழமை பிற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டது.
சில மணி நேரம் கழித்து, அந்த நபர் இறந்து கிடந்ததாக Valais கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மாலை 4 மணிக்கு சற்று முன்னர் அந்த நபர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
நான்கு மணி நேரத்திற்கும் பின்னர், இரவு 8:30 மணியளவில், அவசர சேவைகள் ஒரு நீரோடையில் இருந்து. காணாமல்போனவரின் உயிரற்ற உடலைக் கண்டுபிடித்தன.
மூலம் – 20min