Bassecourt இல் நடந்த களியாட்டத் திருவிழாவில், பங்கேற்ற ஒருவர், மற்றொருவரின் முகத்தில் கடித்து பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
கடிபட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முகத்தில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான உடனடியாக தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று Jura பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
அவரை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூலம் – 20min