26.7 C
New York
Thursday, September 11, 2025

புலம்பெயர் தமிழரை கிழித்து தொங்க விட்ட கொடிகாமம் பொலிஸ்.

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு, பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர், வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வெளிநாட்டு பணத்தினை மாற்ற கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் காணொளி பதிவிட்டு, வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டிருந்தார்.

அதேபோன்று சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்குச் சென்று, மாணவிகளின் அனுமதியின்றி , ரிக் ரொக் தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற பொலிஸார், அதிபரின் அனுமதியின்றி மாணவிகளைக் காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டு , அவற்றினையும் காணொளிகளாக பதிவிட்டுள்ளார்.

குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles