யூரோவிஷன் 2025 பாடல் போட்டிக்காக சுவிஸ் போஸ்ட் ஒரு சிறப்பு முத்திரையை வெளியிடுகிறது.
பாசலில் மே 13ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த போட்டியின் வரலாற்றை இந்த முத்திரை கலைநயத்துடன் சித்தரிக்கிறது.
Winterthur ஐ சேர்ந்த கலைஞர் Balthasar Bosshard,வடிவமைத்த, இந்த முத்திரையில் 1950களில் இருந்து இன்று வரையிலான யூரோவிஷன் பாடல் போட்டியின் வளர்ச்சியை கலைநயத்துடன் சித்தரிக்கும் வகையில், ஒரு பாடும் வாய் இடம்பெற்றுள்ளது.
இந்த முத்திரை நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
மூலம்- bluewin