-2.4 C
New York
Wednesday, December 31, 2025

தபால் பஸ்- ட்ரக்டர் விபத்தில் இருவர் காயம்.

Maschwanden இல் இடம்பெற்ற விபத்தில், இரண்டு பேர் காயமடைந்தனர்.

டிரக்டர் ஒன்று, தபால் பஸ் மீது நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் ட்ரக்டரை ஓட்டிச் சென்ற 19 வயது ஓட்டுநரும், 37 வயதான தபால் பஸ் ஓட்டுநலும், காயம் அடைந்தனர்.

பஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லாததால், வேறு யாருக்கம் பாதிப்பு ஏற்படவில்லை.

சூரிச் கன்டோனல் பொலிசாரும், அரசு வழக்கறிஞர் அலுவலகமும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles