21.6 C
New York
Friday, September 12, 2025

தஞ்சம் கோரும் ஆதரவற்ற சிறார்களின் எண்ணிக்கை  40% சரிவு.

சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரும் ஆதரவற்ற சிறார்களின் எண்ணிக்கை 2023 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு,  40% குறைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான், துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து புகலிட விண்ணப்பங்கள் குறைந்து வருவதே இந்த சரிவுக்குக் காரணம்.

கடந்த ஆண்டு,தனியாகப் பயணம் செய்து, சிறார்கள் என்று கூறி, நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2,639 ஆகும்.

இது அனைத்து புகலிட விண்ணப்பங்களிலும் 12.4%  ஆகும்.

2023 இல் இது 17.9% மாக இருந்தது என்று இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெரும்பாலான துணையில்லாத சிறுவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள் (1,295; 49%). இது 2023 உடன் ஒப்பிடும்போது 53% குறைவு (2,774) என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சோமாலியா 217, அல்ஜீரியா 214, மொராக்கோ 202 மற்றும் கினியா 111  ஆகிய நாடுகளில் இருந்து இவ்வாறானவர்கள் வந்தனர்.

இவர்களில். 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் 76.2% ஆகும்.

13 முதல் 15 வயதுடைய துணையில்லாத சிறுவர்களின் எண்ணிக்கை  22.2% மாக இருந்தனர்.

8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் 1.4% மட்டுமே.

இவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் ஆண்கள் (95.2%) என்றும் SEM சுட்டிக்காட்டுகிறது.

இந்த தரவு விண்ணப்பதாரர்கள் ஒரு சுவிஸ் புகலிட மையத்திற்குள் நுழைந்தபோது அவர்களால் அறிவிக்கப்பட்ட வயதைக் குறிக்கிறது.

இருப்பினும், கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, இளம் புகலிடக் கோரிக்கையாளர்களில் கால் பகுதியினர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles