-1.3 C
New York
Wednesday, December 31, 2025

சிரியாவிற்கு எதிரான தடைகளை தளர்த்தியது சுவிட்சர்லாந்து.

சிரியாவிற்கு எதிரான சில தடைகளை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது.

டமாஸ்கஸில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவைப் பின்பற்றியே, சுவிட்சர்லாந்து தடைகளையும் தளர்த்தியுள்ளது.

சிரிய எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளதாக பெடரல் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.

சில நிதி சேவைகள் மற்றும் வங்கி உறவுகளும் மீண்டும் அனுமதிக்கப்படும்.

சிரியாவில் அமைதியான மற்றும் ஒழுங்கான அரசியல் மாற்ற செயல்முறையை ஆதரிப்பதற்காகவே தடைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருட்கள் தடைகள் உட்பட சிரியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த கட்டளைச் சட்டத்தின் ஏனைய விதிகள் இந்த முடிவால் பாதிக்கப்படவில்லை.

தடைகளை தளர்த்துவதால், தடுக்கப்பட்ட எந்த நிதியையும் விடுவிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

2011 மே 18, ஆம் திகதி  சிரியாவிற்கு எதிரான தடைகளை சுவிட்சர்லாந்து முதன்முறையாக ஏற்றுக்கொண்டது.

சிரிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை அடக்குமுறை காரணமாக சிரியாவிற்கு எதிரான தடைகள் விதிக்கப்பட்டன.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles