Seuzach இல் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து 30 வயதுடைய இத்தாலியப் பெண் ஒருவர் தள்ளிவிடப்பட்டதில் படுகாயம் அடைந்துள்ளார்.
உணவகம் ஒன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்றுக்காலை இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபரான 25 வயதுடைய சுவிஸ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம்-bluewin