Eschenz இல் Thurbo ரயில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.
S1 பாதையில், Stein am Rhein இல் இருந்து Kreuzlingen நோக்கி சென்று கொண்டிருந்த போது. ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன.
நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 2 பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
விபத்து நடந்த நேரத்தில், ரயிலில் 25 பயணிகள் இருந்தனர்.
மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்துக்கு இந்த பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை.
மூலம்-20min